பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும்; உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நீண்ட கால தேவைக்கு ஏற்ப வகுக்கப்படுவது தேசிய ரயில் திட்டமாகும். எதிர்கால உள்கட்டமைப்பு, வர்த்தக, பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொள்ளும் தேசிய ரயில் திட்டத்தின் வரைவு தற்போது பல்வேறு அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், "2030ஆம் ஆண்டின் தேவையைக் கருத்தில் கொண்டு ரயிலின் இருக்கை வசதிகள் அமைக்கப்படும். புதிதாக அமைக்கப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் 2050ஆம் ஆண்டு வரை தொடரும். கார்பன் வெளிப்பாட்டை குறைக்கும் வகையில் சரக்கு ரயிலில் கொள்திறன் 27 விழுக்காட்டிலிருந்து 45 விழுக்காடாக உயர்த்தப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளிப்பாடு பூஜ்ஜியம் விழுக்காடாக குறைக்கப்படும்.
சரக்கு மற்றும் பயணிகள் ரயிலின் உண்மையான தேவையைக் கணக்கிலிட நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.