புல்வாமா (ஜம்மூ - காஷ்மீர்): ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சென்ற திங்கள்கிழமை (ஏப்.18) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஜம்மூ- காஷ்மீர் காவல் துறையினர் கூறுகையில், ‘ சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் கான்ஸ்டபிள் சுரேந்திர குமார் காகாபோராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தனர்’ எனத் தெரிவித்தனர்.
காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கான்ஸ்டபிள் சுரேந்திர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். காவல் ஆய்வாளர் SMHS மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று (ஏப்.23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜம்மூ-காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜம்முவில் தீவிரவாத தாக்குதல் - பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தலா?