ETV Bharat / bharat

ராகுல் காந்தி வா.. தலைமை ஏற்க வா.. சித்த ராமையா அழைப்பு!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்த ராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

Siddaramaiah
Siddaramaiah
author img

By

Published : Oct 11, 2021, 7:12 PM IST

பெங்களூரு: சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்றும், விரைவில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்த ராமையா திங்கள்கிழமை (அக்.11) கூறினார்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்துள்ளேன்.

சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லை, அவரால் கடமைகளை செய்ய இயலாது. ஆகவே ராகுல் காந்தி உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து கர்நாடகாவில் நிலக்கரி பற்றாக்குறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “மாநிலத்தில் புதுப்பிக்க தகுந்த ஆற்றல் மூலம் தேவையான அளவு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது, நிலக்கரி பற்றாக்குறை குறித்து கர்நாடகம் கவலைக்கொள்ள தேவையில்லை” என்றார்.

மேலும், “நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை என்பதை மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : ராகுல் காந்தி கரங்களுக்கு வலு சேர்ப்பாரா சித்த ராமையா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.