புதுச்சேரியில் பாஜக, என்ஆர் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இதற்காக அக்கட்சி மேலிட முக்கியத் தலைவர்கள் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். ஆளும் காங்கிரஸ் தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. திமுக மேலிட உத்தரவிற்காக காத்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் டெல்லி சென்ற முதலமைச்சர் நாராயணசாமி, அங்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். அப்போது அவரிடம் புதுச்சேரிக்கு வந்து பரப்புரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
பின்னர், வரும் 17ஆம் தேதி புதுச்சேரிக்கு வருவதாக அவர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து புதுச்சேரியில் 17ஆம் தேதி மாலை ஏ.எஃப்.டி. மைதானத்தில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்றுப் பேசுகிறார்.
ராகுல் வருகையின்போது புதுச்சேரி மீனவப் பெண்கள், விளிம்புநிலை மக்களிடம் கலந்துரையாடவும், வணிகர்களைச் சந்தித்து உரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் செய்துவருகிறது.
இதையும் படிங்க...'ஸ்டாலின் தலைமையில் வளமான தமிழ்நாடு அமைய வேண்டும்' - சமாஜ்வாதி