நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயளிக்கான படுக்கைகள், வெண்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, சில மருத்துவமனைகள் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையை அறிவித்ததை அடுத்து, கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 15) ராகுல் காந்தி மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டில், "மருத்துவமனையில் முறையான சோதனைகள் இல்லை, படுக்கைகள் இல்லை, வென்டிலேட்டர்கள் இல்லை, ஆக்ஸிஜன் உருளைகள் இல்லை, தடுப்பூசி இல்லை. இதைப் பற்றி பிரதமர் கவலைப்படுகிறாரா?" என்றும் பதிவிட்டியிருந்தார்.
இதையும் படிங்க: ’கல்லூரியில் ஆங்கிலப் பாடகனாக அசத்திய விவேக்' - நினைவுகளைப் பகிர்ந்த ஓவியர்