டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது முதலமைச்சர், ராகுல் காந்தி, சோனியா காந்திக்குப் பொன்னாடை வழங்கி வாழ்த்தினார். மேலும் சோனியா காந்திக்கு அன்புப் பரிசாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஸ் அலுவலரும், வரலாற்று ஆராய்ச்சியாளருமான பால கிருஷ்ணன் எழுதிய ''Journey of a civilization; indus to vaigai' என்னும் புத்தகத்தை வழங்கினார்.
இந்நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "வளமான, வலுவான தமிழ்நாட்டை உருவாக்க திமுகவுடன் ஒன்றிணைந்து பாடுபாடுவோம். நானும் எனது தாயார் சோனியா காந்தியும், ஸ்டாலின், அவரது துணைவியாரை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்!