ETV Bharat / bharat

மன்னிப்பை கற்றுக்கொடுத்தவர் எனது அப்பா - ராகுல் காந்தி ட்வீட் - Rahul Gandhi Tweet

எங்களுக்கு மன்னிப்பின் மகத்துவத்தை உணர்த்தியவர் எனது அப்பா என்று ராஜிவ் காந்தியின் நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ட்வீட்
ராகுல் காந்தி ட்வீட்
author img

By

Published : May 21, 2022, 10:59 AM IST

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புத்தூரில் தேர்தல் பரப்புரைக்கு வந்த இடத்தில் நடந்த மனித குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவரின் 31ஆவது நினைவுநாள் இன்று (மே 21) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவரின் மகனான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தையை நினைவு கூர்ந்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எனது தந்தை தனக்கென்று குறிக்கோளுடன் வாழ்ந்த தலைவர். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.

  • My father was a visionary leader whose policies helped shape modern India.

    He was a compassionate & kind man, and a wonderful father to me and Priyanka, who taught us the value of forgiveness and empathy.

    I dearly miss him and fondly remember the time we spent together. pic.twitter.com/jjiLl8BpMs

    — Rahul Gandhi (@RahulGandhi) May 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவர் ஒரு இரக்கமுள்ள, கனிவான மனிதர். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை, அவர் மன்னிப்பின் மகத்துவத்தை எங்களுக்கு உணர்தியவர். நாங்கள் ஒன்றாக இருந்த நாட்களையும் அவருடனான அற்புத தருணங்களையும் நினைவுக்கூர்கிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும், ராஜிவ் காந்தியின் குறித்த காணொலி ஒன்றையும் பதிவோடு இணைத்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எனது ரத்தம் கலந்துள்ளது: ராகுல் காந்தி நெகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.