விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு; ராஜஸ்தான் பயணிக்கும் ராகுல் காந்தி - ராகுல் காந்தி பிப்ரவரி 12ஆம் தேதி ராஜஸ்தான் பயணம்
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதை அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அஜய் மாக்கன் உறுதிபடுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த விவகாரத்தை கையிலெடுத்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதையும் படிங்க: ஐநாவின் உயரிய விருதை தட்டிச் சென்ற ஒடிசா பெண் வன அலுவலர்