இது குறித்து அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் தனது வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், "இந்திய மக்களவை உறுப்பினரும், இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கார்னெல் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பேராசிரியர் கவுஷிக் பாசுவுடன் இணைந்து, இந்தியா மற்றும் உலகில் ஜனநாயகம், வளர்ச்சி, அரசியல் ஆகியவை குறித்து பேராசியர்கள், மாணாக்கர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
இதையும் படிங்க...மீனவர்களுடன் கடலில் குளித்த ராகுல் காந்தி
கவுஷிக் பாசு பொருளாதாரம் பேராசிரியராகவும், கார்ல் மார்க்ஸ் சர்வதேச ஆய்வுகள் துறையில் பேராசிரியராகவும் உள்ளார். கவுஷிக் 2012 முதல் 2016ஆம் ஆண்டுவரை உலக பொருளாதார மையத்தின் தலைமை பொருளாதார நிபுணராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...சென்னையில் பேருந்து சேவை பாதிப்பு!