டெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதூரியின் வகுப்புவாத கருத்துக்கள் தொடர்பான சர்ச்சையை சுட்டிக்காட்டிப் பேசிய ராகுல் காந்தி, சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பைத் திசை திருப்ப பாஜக பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் பா.ஜ.கவை தோல்வி அடையச் செய்யலாம் எனத் தெரிவித்தார்.
-
LIVE: Shri @RahulGandhi's address at The Conclave 2023, New Delhi. https://t.co/kEiR9aNZXe
— Congress (@INCIndia) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">LIVE: Shri @RahulGandhi's address at The Conclave 2023, New Delhi. https://t.co/kEiR9aNZXe
— Congress (@INCIndia) September 24, 2023LIVE: Shri @RahulGandhi's address at The Conclave 2023, New Delhi. https://t.co/kEiR9aNZXe
— Congress (@INCIndia) September 24, 2023
தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' என்ற திட்டம் மக்களின் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கத்திற்காகச் செய்யப்படுகிறது. இந்தியாவில் முக்கிய பிரச்சினைகளாக வேலையின்மை, பட்டியலின மக்களின் பிரச்சினைகள், சமத்துவமின்மை, பழங்குடியின மக்களுக்கு ஏற்படும் அநீதி, விலைவாசி உயர்வு உள்ள நிலையில், பா.ஜ.க அரசு மக்களைத் திசை திருப்பு செயல்களைச் செய்து வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றத்தை ‘மோடி மல்டிபிளக்ஸ்’ என விமர்சித்த காங்கிரஸ் - பாஜக பதிலடி!
ஐந்து மாநிலத் தேர்தல் குறித்த கேள்விக்கு, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களைச் செய்ய விடாமல் பா.ஜ.க எங்கள் கவனத்தைத் திசை திருப்பி வந்தது. கர்நாடகா தேர்தலிலிருந்து காங்கிரஸ் மிக முக்கிய பாடத்தை கற்றுக் கொண்டது. தற்போது கூட எம்.பி பிதுரி மூலம் சாதிக் கணக்கெடுப்பு என்ற எண்ணத்தைத் திசை திருப்ப பா.ஜ.க முயல்கிறது. சாதிக் கணக்கெடுப்பு என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் இந்த விவாதத்தை பா.ஜ.க அரசு விரும்பவில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஒவ்வொரு செயல்களை காங்கிரஸ் கையில் எடுக்கும்போதும், அதை திசை திருப்ப பா.ஜ.க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தற்போது பா.ஜ.க அரசின் செயல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை கற்றுக் கொண்டுள்ளோம். கர்நாடகாவில் நாங்கள் ஒரு தெளிவான பார்வையை மக்களுக்கு வழங்கினோம். இது மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டம் எனத் தெரிவித்தார்.
தெலங்கானா தேர்தலில் பா.ஜ.க இல்லை. தெலங்கானாவில் பா.ஜ.க அழிந்து விட்டது. மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல் எங்களின் கட்டுக்குள் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ளன எனத் தெரிவித்தார்.
மேலும், ராகுல் காந்தி லடாக் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தில் சென்றது, பாரத் ஜோடோ வடிவமைப்பை வேறு பரிமாற்றத்தில் மாற்றம் செய்ய உதவியது எனக் கூறினார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டின் ஏஜென்டாக கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுகிறது" - எடியூரப்பா குற்றச்சாட்டு!