ETV Bharat / bharat

'ஏழை, பணக்காரர்களுக்கு தனித்தனி இந்தியா'; மோடி அரசை வெளுத்து வாங்கிய ராகுல்! - தமிழ்நாடு குறித்து பேசிய ராகுல்

ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத்தலைவர் உரைக்கு வணக்கம் செலுத்தும் விவாதத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு என தனித்தனி இந்தியாவை மோடி அரசு உருவாக்கியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிக கடுமையாக சாடினார்.

ராகுல்
ராகுல்
author img

By

Published : Feb 2, 2022, 9:51 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தின் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத்தலைவர் உரைக்கு வணக்கம் செலுத்தும் விவாதத்தில் இன்று (பிப்.2) சுமார் 50 நிமிடங்கள் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அரசை கடுமையாக சாடினார்.

உரையின்போது பல்வேறு விஷயங்களை முன்வைத்த ராகுல் காந்தி, எனது இந்தியாவைப் பற்றி கவலைப்படுவதாகவும் தெரிவித்தார்.

சிறுதொழில்கள் அழிவு

பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேசுகையில், “இப்போது பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் என இரண்டு வெவ்வேறு இந்தியா உள்ளது. இருவருக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியரசுத் தலைவரின் உரையில் புதிய யோசனைகள் எதுவும் இடம்பெறவில்லை.

அன்று முதல் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என மோடி பேசி வருகிறார். இருப்பினும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு ஒன்றிய அரசு ஆதரவளிக்காததால் பணிகள் சரியாக நடக்கவில்லை.

தற்போது சிறு தொழில்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. சிறுதொழில் முற்றிலுமாக அழிந்துவிட்டதால் 'மேக் இன் இந்தியா' என்பது சாத்தியமற்றது. நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டன.

வேலையில்லாத் திண்டாட்டம்

சில நாட்களுக்கு முன்பு பிகாரில் என்ன நடந்தது என்பது பற்றி குடியரசுத் தலைவர் பேசவில்லை. குடியரசுத்தலைவரின் உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வாக்கியம் கூட இல்லை.

நாளுக்கு நாள் வேலைவாய்ப்பு பிரச்னை அதிகரித்து வருவதால், 2021ஆம் ஆண்டில் மூன்று கோடி இளைஞர்கள் வேலை இழந்திருக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வேலையில்லாத் திண்டாட்டம் இதுதான்.

எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்பதை ஒன்றிய அரசு பேசுவதில்லை. இதைப் பற்றி பேசினால் நாட்டு மக்கள் கிண்டல் செய்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​நாட்டின் 23 கோடி ஏழைகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் வழங்கப்பட்டன. இப்போது வசதி படைத்தவர்களால் மட்டுமே அதை வாங்க முடிகிறது.

அச்சுறுத்தும் பாகிஸ்தான், சீனா

நான் என் நாட்டைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். நீங்கள் இந்த தேசத்திற்கு மிகப்பெரிய ஆபத்து.

பாகிஸ்தான், சீனாவை தனித்தனியாக வைத்திருப்பதே இந்தியாவின் மூலோபாயக் கொள்கையின் மிகப்பெரிய குறிக்கோள்.

ஆனால், நீங்கள் அவர்களை ஒன்றாக இணைத்துள்ளீர்கள். இது மக்களுக்கு எதிராக நீங்கள் செய்த மிகப்பெரிய குற்றம். சீனா ஒரு தெளிவான திட்டத்தை வைத்திருப்பதை நான் தெளிவாகக் காண்கிறேன்.

அவர்களின் திட்டத்தின் அடித்தளம் டோக்லாம், லடாக் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன. இது இந்திய தேசத்திற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். சீனாவுக்கு எதிராக நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசம் வெளியில் இருந்தும், உள்ளே இருந்தும் ஆபத்தில் உள்ளது.

இந்த தேசமும், அதன் மக்களும் பெரும் ஆபத்தில் உள்ளனர். இந்தியா முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானால் சூழப்பட்டுள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் இப்போது இந்தியா மீது நேரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

'தமிழ்நாட்டு மக்களை பாஜக ஒருபோதும் ஆளமுடியாது'

நீட் தேர்வை விலக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் நீட் விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறது.

உங்களுடைய வாழ்நாளில் உங்களால் தமிழ்நாட்டு மக்களை ஒரு நாளும் ஆளவே முடியாது” என்றார்.

ராகுல் காந்தியின் இந்த உரை மக்களவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: Exclusive: விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் - பிரியங்கா காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.