இந்தூர்: காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி - காஷ்மீர் வரை ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை( bharat jodo yatra) பயணத்தை கடந்த செப்.7 ஆம் தேதி தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இந்த நடைப்பயணம் பல்வேறு மாநிலங்களை தாண்டி கடந்த நவ.23 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு சென்றடைந்தது.
இந்நிலையில் இம்மாநிலத்தின் 5-ஆம் நாளான இன்று (நவ.27) இந்தூருக்கு அருகில் உள்ள மோவ் என்ற இடத்தில் யாத்திரை தொடர்ந்தது. அங்கிருந்த உள்ளூர் மக்களும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் உற்சாகமாக ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்றனர். ராகுல் காந்தி உடன் ராவ் தொகுதி எம்.எல்.ஏ ஜிதேந்திர பட்வாரியும் இருந்தார்.
யாத்திரையின் போது இரு நாய்களுடன் விளையாடிய ராகுல், இதைத்தொடர்ந்து ராயல் என்பீல்ட் புல்லட் பைக்கை சிறிது தூரம் ஓட்டினார். சுற்றியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் ராகுலின் பைக் ரைடை கண்டு மகிழ்ந்தனர். மேலும் ராகுல் பைக் ஓட்டும் போது ஹெல்மட் அணிந்து பாதுகாப்பாக ஓட்டினார். இந்த பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி மாதத்துடன் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜி20 தலைமை பொறுப்பை உலக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி