பெகாசஸ் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி 18 எதிர்க்கட்சிகளுக்கு இன்று (ஆக. 3) அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் திமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் அங்கிருந்து கிளம்பிய ராகுல் காந்தி, விலைவாசி உயர்வை கண்டிக்கும்விதமாக நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றார்.
தான் சைக்கிளில் சென்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, "விலைவாசி உயர்வால் சிக்கித் தவிக்கும் நாட்டு மக்களின் பிரதிநிதிதான்நான். இதுதான் அரசு கூறிய நல்ல நாளா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம் - பிரதமர் மோடி