இந்தியாவில் கோவிட் பாதிப்பை எதிர்கொள்ள முக்கிய முன்னெடுப்பாகத் தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் சுமார் 30,000 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் பணத்தில் சுமார் 4,744 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரத்தை இடிவி பாரத் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தடுப்பூசி நிதியை குறைவாக பயன்படுத்தி மக்களின் உயிர்களுக்கு குறைவான முக்கியத்துவத்தையே மத்திய அரசு தருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.