ETV Bharat / bharat

காஷ்மீர் கீர் பவானி கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு - Rahul Gandhi

ஜம்மு காஷ்மீரின் பிரசித்திப் பெற்ற கீர் பவானி கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு செய்தார்.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Aug 10, 2021, 12:27 PM IST

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 9) மாலை ஸ்ரீநகர் சென்ற அவர், பிரதேச காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர்ரின் மகனது திருமண விழாவில் பங்கேற்றார்.

பின்னர் இன்று காலை மத்திய காஷ்மீரில் உள்ள கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள துல்லாமுல்லா கிராமத்தில் உள்ள கீர் பவானி கோயிலில் வழிபாடு செய்தார். ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உடனிருந்தார்.

கீர் பவானி கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு

கோயிலில் வழிபாடு முடித்தபின், தால் ஏரிப் பகுதியில் உள்ள ஹஸ்ரத்பல் தர்காவுக்கு செல்லும் ராகுல் மாலை டெல்லி திரும்புகிறார். சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்குப் பயணம் செய்வது இதுவே முதல்முறை.

இதையும் படிங்க: கபில் சிபல் வீட்டில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விருந்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.