ETV Bharat / bharat

‘இந்திய மாநிலங்களின் மீதான தாக்குதல்’ - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்! - Rahul Gandhi news in tamil

Rahul Gandhi criticize One Nation, One Election: நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது, இந்திய நாடு மற்றும் மாநிலங்கள் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 3:21 PM IST

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகளை வழங்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு முன்னதாகவே, இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அவ்வப்போது கூறப்பட்டு வந்தாலும், இது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

  • INDIA, that is Bharat, is a Union of States.

    The idea of ‘one nation, one election’ is an attack on the 🇮🇳 Union and all its States.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தனது ‘X' வலைதளப் பதிவில், “இந்தியா, ஒரு பாரதம். மாநிலங்களின் ஒருங்கிணைப்பு. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சிந்தனையானது நாடு மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களின் மீதான தாக்குதல்” என தெரிவித்து உள்ளார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி, இந்த உயர்மட்டக் குழுவில் இணைய மறுப்பு தெரிவித்து விட்டார்.

மேலும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரும், இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே குழுவில் இடம் பெறாதது குறித்தும் அதிர் ரஞ்சன் செளத்ரி வருத்தம் தெரிவித்து இருந்தார். ஆனால், கார்கேவுக்குப் பதிலாக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் குழுவில் இணைக்கப்பட்டு இருந்தார்.

இதையும் படிங்க: Sonia Gandhi : சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவை, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஆகிய தேர்தல்களை ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடத்துவதற்காக ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்க 8 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட இந்தக் குழுவானது, இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கத்திற்காக திருத்தங்கள் தேவைப்படும் பிற சட்டங்கள் மற்றும் விதிகளில் குறிப்பிட்ட திருத்தங்களை மேற்கொள்ள ஆய்வு செய்து பரிந்துரைக்கும். அது மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு அனைத்து மாநிலங்களின் ஒப்புதலும் தேவையா என்பதை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Special Session of Parliament: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் சிறப்பு என்ன? எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.