ETV Bharat / bharat

பிரதமரின் அலட்சியத்தால் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பு - ராகுல் குற்றச்சாட்டு - Rahul Gandhi news in Tamil

டெல்லி: பிரதமரின் அலட்சியத்தால் இந்தியாவில் ஒரு கோடி கரோனா பாதிப்பும், 1.5 லட்சம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ட்வீட்
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ட்வீட்
author img

By

Published : Dec 19, 2020, 12:11 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 ஆயிரத்து 153 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியைக் கடந்துள்ளது.

கரோனா வைரசால் நேற்று (டிச. 18) மட்டும் 347 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்புகள் குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "கிட்டத்தட்ட 1.5 லட்சம் உயிரிழப்புகளுடன், கரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ட்வீட்
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ட்வீட்

பிரதமரின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பின் மூலம் கரோனா பரவலை தடுக்க முடியவில்லை. ஆனால், இது பல லட்சம் மக்களின் உயிரை வாங்கியுள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க...அசோசம் அறக்கட்டளை வாரம்: பிரதமர் மோடி சிறப்புரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.