-
Upwards and onwards - Unstoppable! pic.twitter.com/waZmOhv6dy
— Congress (@INCIndia) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Upwards and onwards - Unstoppable! pic.twitter.com/waZmOhv6dy
— Congress (@INCIndia) August 19, 2023Upwards and onwards - Unstoppable! pic.twitter.com/waZmOhv6dy
— Congress (@INCIndia) August 19, 2023
லே (லடாக்): காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தற்போது லடாக்கிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில், லடாக்கில் உள்ள லே (Leh) நகரத்தில் இருந்து பாங்காங் ஏரி (Pangong lake) வரை ராகுல் காந்தி பைக் ரைடு சென்று உள்ளார். ராகுல் காந்தி தனது பைக் மீதான ஆசையை அவ்வப்போது நிறைவேற்றி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருவார்.
இந்த முறை மேற்கொண்டு உள்ள லடாக் பயணத்தின்போதும் ராகுல் காந்தி இதனை தவற விடவில்லை. தற்போது மேற்கொண்ட ரைடில் கேடிஎம் 390 டியூக் (KTM 390 Duke) பைக்கை ராகுல் காந்தி பயன்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரைடு சென்ற புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவில், “நாங்கள் பாங்காங் ஏரி வழியாக செல்லும்போதெல்லாம் எனது தந்தை ஒன்றை கூறுவார். அது இந்த உலகிலேயே மிக அழகிய இடங்களில் ஒன்று என கூறுவார்” என தெரிவித்து உள்ளார். அது மட்டுமல்லாமல், இந்த பதிவில் லே, லடாக் மற்றும் பாங்காங் ஆகிய ஹேஷ்டேக்குகளை ராகுல் பயன்படுத்தி உள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி, தான் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது பைக் ரைடு செய்வார். அதிலும், பாரத் ஜோடா யாத்ரா என்னும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் மேற்கொண்டிருந்தபோதும் பைக் ரைடு செய்து, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார். ஆனால், டியூக் 390 பைக் வைத்துள்ள ராகுல் காந்தியால் பாதுகாப்பு காரணங்களால் டெல்லியில் பைக் ரைடு செய்ய முடியவில்லை.
மேலும், ராகுல் காந்தியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை (ஆகஸ்ட் 20) பாங்கான் ஏரியில் சிறப்பு பூஜை செய்ய உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக பாங்காங் ஏரி மற்றும் கார்கிலுக்கு செல்வதற்காக ராகுல் காந்தி லே-க்கு வந்தார்.
அப்போது, அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆறு நாட்களுக்கு லடாக்கில் முகாமிடும் ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். முன்னதாக, இளைஞர்கள் உடன் ராகுல் காந்தி நேற்று உரையாடல் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து கால்பந்து மேட்ச்சையும் ராகுல் பார்த்து ரசித்தார். மேலும், நாளை பாங்காங் ஏரியில் நடைபெற உள்ள ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்கும் ராகுல் காந்தி, அடுத்ததாக கார்கிலில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உரையாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் அமேதி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி? உ.பி தேர்தலில் வாகை சூடுவது யார்?