ETV Bharat / bharat

Republic day 2022 - காவலர் பாபு ராம் குடும்பத்தினரிடம் அசோக் சக்ரா விருது வழங்கிய குடியரசுத் தலைவர் - பாபு ராம் அசோக் சக்ரா விருது

நாட்டின் மிக உயரிய விருதான அசோக் சக்ரா விருதை காவலர் பாபு ராம் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார்.

ASI Babu Ram
ASI Babu Ram
author img

By

Published : Jan 26, 2022, 11:52 AM IST

நாட்டின் 73ஆவது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தேசிய கொடியை ஏற்றிய பின்னர், வீரதீர செயலுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். அமைதி காலத்தின் மிக உயரிய விருதான அசோக் சக்ரா விருது பயங்கரவாத மோதில் வீர மரணம் அடைந்த துணை காவல் ஆய்வாளர் பாபு ராம்முக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை குடியரசு தலைவரிடம் பாபு ராமின் மனைவி ரீனா ராணி மற்றும் அவரது மகன் மனிக் பெற்றுக்கொண்டனர்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பாபு ராம் 2020 ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத மோதலில் வீரமரணம் அடைந்தார். பின்னர் 12 வீரர்களுக்கு ஷௌரிய சக்ரா விருது உள்பட மொத்தம் 384 வீரதீர விருதுகள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டன. விருது வழங்கும் நிகழ்வுக்குப்பின் குடியரசு தின ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: Republic Day: 15,000 அடி உயரத்தில் தேசிய கொடியை பறக்கவிட்ட எல்லை வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.