பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர்களான நாவஸ் ஷெரிஃப் மற்றும் பூட்டோவின் கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கியுள்ளன. தேர்தலில் இம்ரான் கட்சி தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், அங்கு ராணுவத்தின் ஆதரவுடன் ஆட்சியை நடத்திவருகிறார் இம்ரான் கான்.
இதையடுத்து, இம்ரான் அரசு ஜனவரி 31ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கெடு விதித்துள்ளன. இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி பேசுகையில், தேசிய சட்டப்பேரவையில் முழு பலத்தை இம்ரான் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சிகள் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது அர்த்தமற்றது.
11 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினாலும் மக்களுக்கு உண்மை நன்கு தெரியும். எனவே, இந்த மிரட்டலுக்கு எல்லாம் இம்ரான் அரசு அடிபணியாது. பதவி விலகல் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் கைது