ETV Bharat / bharat

புதுச்சேரியில் காலாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரைப் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அறிவிப்பு

author img

By

Published : Aug 21, 2022, 5:36 PM IST

புதுச்சேரியில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையில், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் நடைபெறும்.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதையடுத்து 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெறும். செப்டம்பர் 26ஆம் தேதி மொழிப்பாடம், 27ஆம் தேதி ஆங்கிலம், 28ஆம் தேதி கணக்கு, 29ஆம் தேதி அறிவியல், 30ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வுகள் காலையில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.