புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனாவின் தாக்கத்திற்கு ஏற்ப பள்ளிகள் மூடப்படுவது குறித்து அறிவிக்கப்படும், என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார் .
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநிலத் தலைவர் சாமிநாதன், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் 2 நபர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கரோனாவின் தாக்கத்திற்கு ஏற்ப பள்ளிகள் மூடப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க:New Commissioner Office Divisions: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவல் ஆணையரகங்கள்கீழ் இயங்கும் காவல் நிலையங்கள்