புதுச்சேரி: Covid-19 awareness christmas hut: நோணாங்குப்பம் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் நுண்கலை ஆசிரியர் சு. சுந்தரராசு ஒவ்வொரு ஆண்டும் குடில் அமைத்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு முன்பு 1 கன செ.மீ. கிறிஸ்துமஸ் குடில் செய்து அசத்தினார்.
அதேபோல் காய்கறிகளால் குடில், குடிநீர் நெகிழிக் பாட்டில்கலால் வடிவமைத்த குடில், தேங்காய்களைக் கொண்டு வடிவமைத்த குடில், 25 வகை தானியங்களைக் கொண்டு வடிவமைத்த குடில், 700 புத்தகங்களைக் கொண்டு வடிவமைத்த குடில், கடந்த ஆண்டு 1000 துணிப்பைகளைக் கொண்டு குடில், பல்வேறு வகையான திண்பண்டங்களைக் கொண்டு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது வீட்டில் வித்தியாசமான முறையில் கோவிட் 19 தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளார்.
இந்த விழிப்புணர்வு கருத்தை மையமாகக் கொண்டு நான்கு அடி உயரமான அளவில் மருந்து செலுத்தும் ஊசியையும், இரண்டு அடி பெரிய அளவில் மாதிரி கோவிட் மருந்து பாட்டில் உருவாக்கி அந்த கோவிட்-19 மருந்து பாட்டிலின் உள்பகுதியில் மாட்டுத் தொழுவத்தில் குழந்தை ஏசு பிறப்பதுபோல் அமைத்துள்ளார்.
மேலும், நட்சத்திரம் ஒளிப்பதுபோல் அதில் மாதா, சூசையப்பர், ஆடு, மாடு, கழுதை, ஒட்டகம் பேன்றவை உள்ளதுபோல் குடிலை வடிவமைத்துள்ளார். மேலும் கிறிஸ்துமஸ் மரம், நிலப்பகுதிகளுக்கு மருந்து ஊசியைக் கொண்டு வழிப்பாதை செல்வதுபோல் அதில் ராஜக்கள் பரிசுப்பொருள் எடுத்துக்கொண்டும் வருவதுபோல் பல்வேறு வகையான மின் வண்ண விளக்குகளைக் கொண்டு குடில் அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் கிறிஸ்துமஸ் தாத்தா
இதில் கிறிஸ்துமஸ் தாத்தா மருத்துவர்போல் உடை அணிந்துகொண்டு முகக்கவசம் போட்டுக்கொண்டு ஒரு கையில் ஊசி மற்றொரு கையில் கரோனா தடுப்பூசி மருந்து வைத்துக்கொண்டு மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதுபோல் தத்ரூபமாகச் செய்துள்ளார்.
மேலும் குடில் பின் பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் ‘புதுச்சேரியில் 100 விழுக்காடு கோவிட் - 19 தடுப்பூசி செலுத்தி கரோனா இல்லாத உலகம் படைப்போம்’ என கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளர். மேலும் எந்தவிதமான தொற்றும் வராமல் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என்று இந்த கிறிஸ்துமஸ் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவித்துவருகிறார்.
இதையும் படிங்க:கிறிஸ்துமஸ் விடுமுறை: விமான கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு