கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.
மாணவர்கள் தங்களுக்கென்று சானிடைசர்களைக் கொண்டுவரவும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 50 விழுக்காடு மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் நிலையில், அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மாணவர்கள் பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், "இது தவறான முடிவு. நாங்கள் முழுவதுமாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பதால் தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி முழுவதுமாகச் செலுத்தாத நிலையில் அரசுப் பள்ளிகளைத் திறக்கக் கூடாது" என்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: விஷம் வைத்து கொல்லப்பட்ட 38 குரங்குகள்: காரணம் இதுதான்!