அமிர்தசரஸ் : அமிர்தசரஸ் கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ-வும் ஆன நவ்ஜோத் சிங் சித்து இன்று (ஜன.29) காலை 11.15 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்து, “பஞ்சாப்பில் தர்ம யுத்தம் நடைபெறுகிறது. இந்தத் தர்மயுத்தத்தில் காங்கிரஸ் வெற்றிபெறும். மஜிதியாவுக்கு (சிரோமணி அகாலிதள வேட்பாளர்) தைரியம் இருந்தால் அவர் என்னோடு மோதட்டும். பார்க்கலாம்” என்றார்.
-
Will file my nomination paper’s tomorrow at 11.15
— Navjot Singh Sidhu (@sherryontopp) January 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Will file my nomination paper’s tomorrow at 11.15
— Navjot Singh Sidhu (@sherryontopp) January 28, 2022Will file my nomination paper’s tomorrow at 11.15
— Navjot Singh Sidhu (@sherryontopp) January 28, 2022
பாரதிய ஜனதா கட்சி அதிகமுறை வென்றுள்ள அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டும் (2004) சித்து வென்றுள்ளார். இவரது மனைவி நவ்ஜோத் சிங் கவுரும் (2012) இத்தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
இந்தத் தொகுதியில் தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நவ்ஜோத் சிங் சித்துவை எதிர்த்து சிரோமணி அகாலிதளம் கட்சி சார்பில் பிகாராம் சிங் மஜிதியா களத்தில் உள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வருகிற 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க : தாயையும், சகோதரியையும் வீட்டை விட்டு விரட்டியவர் சித்து.. சித்து சகோதரி கண்ணீர்