சண்டிகர் (பஞ்சாப்) : பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள 7 என்ற எண்ணைக் கொண்ட வீட்டின் பின்புறத்தில், குப்பைகள் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த வீட்டிற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்ட சலானை சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் அனுப்பியுள்ளது.
இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்ட 7 ஆம் எண்ணைக் கொண்ட வீடு, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்குச் சொந்தமானது என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் முதலமைச்சர் இந்த வீட்டில் வசிக்காமல், அருகில் உள்ள 6 ஆம் எண் வீட்டில் வசித்து வருவதாகவும், 7 ஆம் எண் வீட்டில் முதலமைச்சரின் பாதுகாவலர்கள் மற்றும் முதலமைச்சரின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சண்டிகர் நகராட்சியால் அனுப்பப்பட்ட நோட்டீஸை வாங்க, அங்கிருந்த அலுவலர்கள் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியர்கள் நியமன ஊழல் - மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் சட்டர்ஜி கைது!