ETV Bharat / bharat

புனேயில் நரேந்திர மோடிக்கு கோயில்!

author img

By

Published : Aug 17, 2021, 8:56 PM IST

Updated : Aug 17, 2021, 10:35 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நரேந்திர மோடிக்கு கோயில் எழுப்பியுள்ளார் மயூர் முண்டே. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் எழுப்பியது குறித்து ஈடிவி பாரத்துக்கு பேட்டியும் அளித்துள்ளார்.

Narendra Modi
Narendra Modi

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நரேந்திர மோடிக்கு கோயில் எழுப்பியுள்ளார் மயூர் முண்டே. இவர் நமோ பவுண்டேசன் நடத்திவருகிறார். அத்துடன் தனது சொந்த நிலத்தில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் உந்தப்பட்டு கோயில் கட்டியதாக கூறினார்.

மேலும் நாம் வாழும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்காக நிறைய செய்கிறார். அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். நான் கட்டி முடித்துள்ளேன்” என்றார்.

புனேயில் நரேந்திர மோடிக்கு கோயில்!

பிரதமர் நரேந்திர மோடி கோயில் புனே மாவட்டத்தில் அவுந்த் (Aundh) பகுதியில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கும் அவர்களது அபிமானிகள் கோயில் கட்டியுள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆலயம்!

Last Updated : Aug 17, 2021, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.