ETV Bharat / bharat

Covid 19 vaccine in puducherry: தடுப்பூசி செலுத்த வந்த சுகாதார ஊழியர்கள் - மரத்தின் மேல் ஏறி அட்டகாசம் செய்யும் இளைஞர் - தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறி அட்டகாசம் செய்யும் புதுச்சேரி வில்லியனூர் கிராமவாசி

Covid 19 vaccine in puducherry: புதுச்சேரியில் தடுப்பூசிக்கு பயந்து இளைஞர் ஒருவர் மரத்தின் மீது ஏறி போக்கு காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் தடுப்பூசி
புதுச்சேரியில் தடுப்பூசி
author img

By

Published : Dec 28, 2021, 9:13 PM IST

Covid19 vaccine in puducherry: புதுச்சேரி வில்லியனூர் கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல்(39). இவர் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார்.

இந்த நிலையில் புதுவை கூடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் புதுவை கோனேரிக்குப்பம் பகுதிக்கு செவிலியர் சென்று, முத்துவேலுவை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால், அவர் ஒவ்வொரு முறையும் செவிலியர் வரும்போது தடுப்பூசிக்குப் பயந்து மரத்தின் மேல் ஏறி போக்குக் காட்டி வந்துள்ளார்.

தடுப்பூசிக்குப் பயந்து மரத்தின் மேல் ஏறி அட்டகாசம் செய்யும் கிராமவாசி

தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் குடிக்கக்கூடாது என்று கூறியதால், அவர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தற்போதும் செவிலியர் அவருக்குத் தடுப்பூசி செலுத்த வரும்போது மீண்டும் மரத்தின் மேல் ஏறி, நின்று போக்குக் காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Corona Treatment: கரோனா சிகிச்சை; வீடு திரும்பும் வடிவேலு?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.