புதுச்சேரி: சிகிச்சை முடிந்து நலமுடன் அவைக் கூட்டத்தில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பங்கேற்றார். செல்வதற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் கடந்த வாரம் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். மருத்துவம் பெற்றபிந் புதுச்சேரி திரும்பிய அவர் நேற்று சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பேரவையை திருக்குறள் வாசித்துத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, "எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது என் நலம் குறித்து விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி என என் அனைத்து நல விரும்பிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு மருத்துவம் செய்த மருத்துவர், செவிலியர் உள்பட மருத்துவத் துறையில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் மீண்டும் மக்கள் பணியாற்றிட பூரண நலம் வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.