ETV Bharat / bharat

புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.

அரசே நேரடியாக சம்பளம் வழங்க கோரி நகராட்சி ஊழியர்கள் சட்டமன்றம் நோக்கி பேரணி

author img

By

Published : Aug 11, 2022, 10:29 PM IST

புதுச்சேரி: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சார்பில் பேரணி நடைபெற்றது.

சுதேசி மில் அருகே தொடங்கிய பேரணியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹேவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக வந்தனர்.

அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று சட்டமன்றம் அருகே நிறைவு பெற்றது. பேரணியில் கலந்துகொண்ட ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அரசு உடனடியாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.