ETV Bharat / bharat

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு வழங்கிய எம்எல்ஏ! - Puducherry MLA who provided food for the people affected by the nivar storm

புதுச்சேரி: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவை தானே சமைத்து வழங்கினார் புதுச்சேரி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு வழங்கிய எம்எல்ஏ!

author img

By

Published : Nov 26, 2020, 9:40 PM IST

இன்று (நவ. 26) அதிகாலை கரையைக் கடந்த நிவர் புயலின் தாக்கத்தால், புதுவையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. ஆங்காங்கே மரங்களும், மின்கம்பங்களும் பெயர்ந்து சாலையில் வீழ்ந்தன. அவற்றைப் பாதுகாப்பாக அகற்றும் பணிகளில் பொதுப்பணித் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியை முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள பெரியார் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்ட அவர், அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் நிவாரண மையத்திற்குச் சென்ற அவர் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு வழங்கிய எம்எல்ஏ!
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு வழங்கிய எம்எல்ஏ!

இதைத்தொடர்ந்து, முத்தியால்பேட்டை தொகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நிவர் புயல் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை உடனடியாக வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமைக் கழகம் நேற்று அறிவுறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நிவர் புயல் பாதிப்பு: நிவாரண உதவி வழங்கிய ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.