ETV Bharat / bharat

உள்ளாட்சித் தேர்தல்: இட ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் வெளியீடு - Puducherry Voter List

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இட ஒதுக்கீடு அடங்கிய விவரங்களை இன்று (ஆகஸ்ட் 11) அம்மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்
author img

By

Published : Aug 11, 2021, 8:20 AM IST

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அம்மாநிலத் தேர்தல் ஆணையம் துரிதமாக எடுத்துவருகிறது. வார்டு வாரியான தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் நடவடிக்கையாக அட்டவணை இனத்தவர், அட்டவணை இன பெண்கள், பொது பெண்கள் ஆகிய இட ஒதுக்கீடு அடங்கிய விவரங்கள் இன்று வெளியிடப்படுகின்றன.

மேலும், இதன் தொடர்ச்சியாக, பிற்படுத்தப்பட்டவர், பட்டியல் இனத்தவர்களுக்கான ஒதுக்கீடு வருகின்ற 13ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் அறிவிக்கப்படுகிறது. இது, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான www.sec.py.gov.in இல் வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள், இதனை அலுவலக நேரங்களில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் நேரில் சென்று பார்வையிடலாம்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.