ETV Bharat / bharat

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு தமிழிசை பாராட்டு

author img

By

Published : Jul 10, 2021, 9:33 PM IST

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சிறந்த மருத்துவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஆளூநர் தமிழிசை பாராட்டு

புதுச்சேரி: கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூலை 10) நடைபெற்றது. இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்கள், அரசு மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் ஆகியோருக்குச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியின்போது பீச் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், 'மலிவு விலை உணவு' திட்டத்துக்காக 25 ஆயிரம் கையுறைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெ. வெங்கடசுப்பு ரெட்டியார் அறக்கட்டளை மூலமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஆளூநர் தமிழிசை பாராட்டு
கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு தமிழிசை பாராட்டு

மருத்துவர்களுக்கு சவால் ஏற்படுத்திய கரோனா

நிகழ்ச்சியில் பேசும்போது தமிழிசை, "கரோனா காலத்தில் பணியாற்றுவது மருத்துவர்களுக்குச் சவால் நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில் மருத்துவர்கள் சிறப்பாகப் பணியாற்றி, தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பேருதவி புரிந்தார்கள்.

இந்தக் காரணத்துக்காகவே உலக மருத்துவர்கள் நாளை நான் புதுச்சேரியில் கொண்டாடினேன். மருத்துவர்களின் நலம் குறித்து அடிக்கடி அலுவலர்களிடம் விசாரித்து அறிந்தேன்.

பொதுமக்கள் நலன்கருதி தளர்வுகளுடன் ஊரடங்கு

மற்ற மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு இருந்தபோது, பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து இருக்கிறோம்.

அந்த வகையில் அனைத்துவிதமான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது.

படிப்பினைகளை கற்றுக்கொடுத்த கரோனா

நம்மைச் சுற்றியுள்ள உறவுகள், நட்பு, நேரம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான சில படிப்பினைகளை கரோனா நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

நம்முடைய முன்னோர்கள் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும் விஞ்ஞானத்தைப் புகுத்திவைத்திருக்கிறார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா' - சொல்கிறார் மா.சு.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.