புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன் பொறுப்பேற்றபிறகு நேற்று (பிப். 18) கதிர்காமம் அரசு மருத்துவனையில் தடுப்பூசி போடும் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று (பிப். 19) நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த போது பெண்குழந்தை ஒன்று அவருக்கு பூ கொடுத்து வரவேற்றது. அப்போது குழந்தை ஏதோ பேசியது. "காரில் செல்லவேண்டுமா...அழைத்து போகிறேன் " எனக் கூறிய அவர் உள்ளே சென்றார்.
இதனையடுத்து, அங்கன்வாடியில் இருந்த குழந்தைகளிடம் சிறிது நேரம் பேசிய தமிழிசை, குழந்தைகளுக்கு பழங்களை வழங்கினார்; மேலும், பணியாளர்களிடம் அங்கன்வாடி குறித்து விசாரித்தார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “ஆளுநர் மாளிகையைச் சுற்றி இருந்த பல கெடுபிடிகளை, தடைகளை அகற்றிவிட்டேன்” என்றார்.
இதையும் படிங்க...ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!