பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப். 25) தேதி டெல்லியிலிருந்து ராணுவ விமானத்தில் சென்னை வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி லாசுபேட்டை மைதானத்தை அடைகிறார்.
பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். அப்போது விழுப்புரம், நாகப்பட்டினம் இடையே ரூபாய் 2000 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் நான்கு வழி பாதை திட்டம், சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கிலோ மீட்டர் தூரம் பணியினை தொடக்கி வைக்கிறார்.
ரூபாய் 491 கோடி மதிப்பில் ஜிப்மர் மருத்துவமனை கட்டிட பணி, புதுச்சேரி துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தில் ரூபாய் 44 கோடி மதிப்பில் கட்ட உள்ள சிறிய துறைமுகம் மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ரூபாய் ஏழு கோடி மதிப்பில் 400 மீட்டர் தடை களப்பயிற்சி சிந்தடிக் டிராக் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். பாஜக பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் இன்று (பிப். 24) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க...புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை