ETV Bharat / bharat

மூன்றாம் அலை கடுமையாக இருக்கும்...: அறிவுறுத்திய ஆளுநர் தமிழிசை

கரோனா மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் நாம் செயல்படவேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

puducherry governor Tamilisai Soundararajan
மூன்றாம் அலை கடுமையாக இருக்கும்...: அறிவுறுத்திய ஆளுநர் தமிழிசை
author img

By

Published : Jun 25, 2021, 5:23 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர கோவிட் மேலாண்மைக் கூட்டத்தில், தலைமைச் செயலர் அஸ்வின் குமார், காவல்துறை தலைவர் ரன்வீர் சிங் கிருஷ்ணியா, துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, " கரோனா மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது. ஆகவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வில்லாமல் ஈடுபடவேண்டும். தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நோய் எதிர்ப்புத்திறன் குறித்து அறிவியல் பூர்வமாக கருத்தை முன்வைக்கவேண்டும்.

மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் நாம் செயல்படவேண்டும், மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கருத்தரங்கங்கள், பயிற்சிகள் ஆகியவற்றுக்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்யவேண்டும்.

குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டபின் ஏற்படும் உடல்நலக்குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வைகயில் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்தவேண்டும்.

குழந்தைகளுக்குத் தேவையான சத்தான நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் உணவைத் தர தாய்மார்களுக்கு அறிவுறுத்தவேண்டும். அதேபோல், அரசு வழங்கும் மதிய உணவில் சத்தான உணவு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'படி, படி, படி..' - புதுச்சேரி முதலமைச்சரின் ஆட்டோகிராப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.