ETV Bharat / bharat

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு

author img

By

Published : Mar 5, 2021, 3:39 PM IST

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஊடகத்துறையினருக்கு, கரோனா தடுப்பூசி போடும் பணியினை தொடங்கி வைத்தார்.

Puducherry Governor Tamilisai Soundararajan inspected at Puducherry Government Hospital
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு துறைகளில் அவர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு இன்று(மார்ச் 5) வந்த அவர், மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

தேர்தலில் பணியாற்றுபவர்கள், நிர்வாக உயர் பதவியில் இருப்போர், கரோனா தடுப்பூசி போட அவர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரின் இரண்டு ஆலோசகர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும், ஊடகத்தினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியினை இந்த ஆய்வின்போது, அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் சுகாதார துறை செயலர், இயக்குனர், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Puducherry Governor Tamilisai Soundararajan inspected at Puducherry Government Hospital
ஊடகத்தினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியினை தொடங்கிவைத்த ஆளுநர்

இதற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கண்டறியவே இந்த ஆய்வை மேற்கொண்டேன். மருத்துவர்கள் சிலர் மருத்துவமனையில் உள்ள முக்கியமான உபகரணங்களை நவீன படுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும். 9ஆம் வகுப்பு வரை புதுச்சேரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரியிலும் 9, 10, 11 வகுப்புகளுக்கு தேர்வு ரத்தா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.