புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பாண்லே பாலகம் மூலம் குறைந்த விலையில் முகக்கவசம், கிருமிநாசினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று முன்தினம்(ஏப்ரல் 21) தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, 70க்கும் மேற்பட்ட பாண்லே பூத்களில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. அதன்படி பாலகங்களில் முகக்கவசம் ஒன்று 1 ரூபாய்க்கும், கிருமிநாசினி 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலை என்பதால் பாலை வாங்க வரும் பொதுமக்கள் அவற்றையும் தங்கள் வீடுகள், அலுவலகங்களுக்கு வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் கைகோர்க்கும் 'கர்ணன்' கூட்டணி!