புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, " புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. புதுச்சேரிக்கு அதிக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளும் பிரதமர் உரையில் இடம்பெறவில்லை. ஆனால் எனது தலைமையிலான ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாகவும், அதன் காரணமாகவே சீட் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நான் ஊழல் செய்திருந்தால் விசாரணை நடத்தாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், பாஜக கூட்டணியின், முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.பாஜகவின் பி அணியாகவே என்ஆர் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
பணபலம், அதிகார பலம் மூலம் அனைவரையும் மிரட்டி மக்கள் மத்தியில் வாக்கு வாங்கலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர் அது நிறைவேறாது. புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டத்தைக் காங்கிரஸ், திமுக கூட்டணியால் மட்டுமே நிறைவேற்ற முடியும். புதுச்சேரியில், பாஜக கால் ஊன்றினால் மக்களின் நிம்மதி போய்விடும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இடதுசாரிகள் சில தங்க துண்டுகளுக்காக, கேரள மக்களின் முதுகில் குத்துகிறார்கள்- வி முரளிதரன்