புதுச்சேரி: 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற கூட்டத் தொடரை ஒரு வார காலத்திற்கு மேல் நடத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்சபாநாயகர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, ”மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசும் வகையில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்.
மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளுக்கு இதுவரை உதவிகள் வழங்கப்படவில்லை. புதுச்சேரியில் மக்களாட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: திமுக உறுப்பினரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது