ETV Bharat / bharat

மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா - புதுவையைக் கைப்பற்றுமா பாஜக?

புதுச்சேரி: அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 12ஆக குறைந்தது.

puducherry-dmk-mla-resigned
puducherry-dmk-mla-resigned
author img

By

Published : Feb 21, 2021, 10:06 PM IST

புதுச்சேரியில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். இந்த அரசுக்கு காங்கிரஸ் 15, திமுக 3, சுயேச்சை 1 என மொத்தம் 19 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்து வந்தது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, பாரதிய ஜனதா (நியமனம்) 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

இந்நிலையில் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ், பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறிவந்தன.

இதற்கிடையில், ஆளுநர் மாளிகைக்கு எதிர்க்கட்சியினர் சென்று முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.

புதுச்சேரியில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

இதையடுத்து, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 22ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, நாளை(பிப்.22) புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ லஷ்மி நாராயணன் இன்று(பிப்.21) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இவரைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால், புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 12ஆக குறைந்தது.

இதையும் படிங்க: புதுவையில் தொடரும் ராஜினாமா; திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் பதவி துறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.