புதுச்சேரி: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
ஆனால், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் இரவு 12.30 மணிவரை இரவு காட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள்
அதன்படி, புதுச்சேரியில் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுக்கடைகள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதல் தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அக். 8இல் ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு: இது உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரம்!