புதுச்சேரியில் ஏற்கனவே நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகிய மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி அமைச்சரவையை கலைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அம்மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் 19 ஆக இருந்த காங்கிரஸ் கூட்டணியின் பலம் தற்போது 14ஆக சரிந்துள்ளது. அம்மாநில சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரஸ் ஏழு தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதிகளிலும் என எதிர்க்கட்சிகளின் பலம் மொத்தம் 11 என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.