ETV Bharat / bharat

'உக்ரைனிலிருந்து மாணவர்களை அழைத்து வருவதற்கான செலவை அரசே ஏற்கும்' - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை பத்திரமாக மீட்டு வர, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மாணவர்களை அழைத்து வருவதற்கான முழுச்செலவையும் அரசே ஏற்கும் எனவும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Puducherry cm  rescuing students from Ukraine  polio camp  polio camp at puducheery  Puducherry cm Rangaswamy  Russia ukraine crisis  Russia ukraine war  indian student stuck in russia ukraine war  உக்ரைனிலிருந்து புதுச்சேரி மாணவர்களை மீட்க நடவடிக்கை  போலியோ சொட்டு மருந்து  போலியோ சொட்டு மருந்து முகாம்  புதுச்சேரியில் போலியோ முகாம்  ரஷ்யா உக்ரைன் நெருக்கடி
ரங்கசாமி
author img

By

Published : Feb 27, 2022, 7:48 PM IST

புதுச்சேரி: ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடும் சிறப்பு முகாமை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று (பிப்ரவரி 27) கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'புதுச்சேரியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் 86 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி, அரசு பல் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி சுகாதாரத்துறையில் செவிலியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது. காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.

அரசு துறைகளில் பணிபுரியும் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித்துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் இந்த மாதம் முதல் வழங்கப்படும்.

உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை பத்திரமாக மீட்டு வர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்களை அழைத்து வருவதற்கான முழுச்செலவையும் புதுச்சேரி அரசே ஏற்றுக்கொள்ளும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: உக்ரைனுக்கு ஆதரவு தரக்கோரி நரேந்திர மோடியிடம் உக்ரைன் அதிபர் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.