ETV Bharat / bharat

"நானே மன உளைச்சலில் இருக்கிறேன்" - முதலமைச்சர் ரங்கசாமி - state issue

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

நானே மன உளைச்சலில் இருக்கிறேன்.. முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்!

author img

By

Published : Dec 17, 2022, 9:50 AM IST

புதுச்சேரியில் தனி மாநில அந்தஸ்து தேவை என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனிடையே உருளையன் பேட்டை சுயேட்சை சட்டமப்பேரவை உறுப்பினர் நேரு தலைமையில் சில சமூக அமைப்புகள் மாநில அந்தஸ்து கோரி கூட்டங்களை நடத்தி வருகின்றன.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்

அந்த வகையில் நேற்று (டிச.16) எம்எல்ஏ நேரு, 60 சமூக அமைப்புகளுடன் இணைந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார். அப்போது மாநில அந்தஸ்துக்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவதுடன், அனைத்து கட்சி கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "மாநில அந்தஸ்து தரக்கோரி மத்திய அரசிடம் பல முறை கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. நிர்வாகத்தில் இருக்கும் எங்களுக்குத்தான் சிரமங்கள் தெரியும். ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால், பல விஷயங்கள் செய்ய முடியாத நிலை உள்ளது. அதிகமான மன உளைச்சல்தான் ஏற்படுகிறது. சட்டப்பேரவையை கூட்ட வேண்டும். சட்ட ரீதியாக செய்ய வேண்டியதை பார்ப்போம்" என்றார்.

இதையும் படிங்க: அரசு சட்டக் கல்லூரியில் படித்து பதிவு செய்த முதல் திருநங்கை வழக்கறிஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.