புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான வீரப்பமொய்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், " புதுச்சேரியில் வரும் சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். கரோனா , புயல் காலக்கட்டங்களில் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பாக தனது பணியை செய்தார்.
கடும் குளிரில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட பிரதமர் மோடி முன்வரவில்லை. புதுச்சேரி மக்கள் பாஜக மீதும், அதன் கூட்டணி கட்சிகள் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் வெளியேறியுள்ளதாகவும், அவர்கள் வெளியேறியதால்தான் கட்சியின் உண்மையான விசுவாசிகள் யார் எனத் தெரியவந்தது. காங்கிரஸ் தொண்டர்கள் இதனையறிந்து கடுமையாக உழைப்பார்கள். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உழைப்பால் ஆட்சியை பிடிக்கும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், "நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ஜார்க்கண்ட் மாநில கடனை மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி தள்ளுபடி செய்தார் என்ற குற்றச்சாட்டை பாஜக தலைவர் நட்டா கூறியுள்ளது தவறான ஒன்று. அப்போது நான் பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சராக இருந்ததேன்.
அப்போது நான் பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சராக இருந்ததாகவும், நிதி அமைச்சராக இல்லை என்று கூறிய அவர், உண்மை என்ன என்பதை தேசிய தலைவராக இருக்கும் நட்டா புரிந்து கொண்டு பேச வேண்டும். யாரோ அவருக்கு தவறாக எழுதி கொடுத்துள்ளனர். நட்டாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. உண்மை என்ன என்பதை புரிந்துக் கொண்டு பேச வேண்டும் அதை நிரூபிக்க தயாரா என நட்டாவுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.