புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (பிப்.9) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்திற்கு, மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 35 ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றனர். தொடர்ந்து மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திவருகிறோம். ஆளுநரை நியமித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுவதை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை இதுகுறித்து மத்திய அரசிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தி மத்திய அரசிடம் கோரும் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தனது கோரிக்கையை உரிய இடத்தில் பதிவு செய்யாமல் தற்போது மாநில அந்தஸ்தை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க தயாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி தனிப்பட்ட முறையில் புதுச்சேரியின் குடிமகனாக தேர்தலைப் புறக்கணிப்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை” என்றார்.
இதையடுத்து, மத்திய அரசு நமது உரிமைகளை பறிப்பதாக காங்கிரஸ் கட்சி தலைமையின் முடிவை கேட்டு நாங்கள் எங்கள் முடிவை தெரிவிப்போம். தேர்தலைப் புறக்கணிப்பது என்ற கோரிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வர வேண்டும். அப்போது காங்கிரஸ் கட்சி தலைமையை கேட்டு தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு செய்வோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!