ETV Bharat / bharat

நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 நியமன உறுப்பினர்கள்...! - நாராயணசாமி கருத்து - Puducheery news

புதுச்சேரி: சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில், நியமன உறுப்பினர்கள் 3 பேர் கலந்துகொள்ள உரிமையில்லை என்பது எங்களுடைய கருத்து என முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

CM Narayanasamy
CM Narayanasamy
author img

By

Published : Feb 19, 2021, 12:31 PM IST

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு வரும் 22ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு பிறப்பித்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பேசியதாவது:

துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எனக்கு விடுத்த அழைப்பை ஏற்று, நான் ஆளுநர் மாளிகைக்குச் சென்றேன். அங்கு எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

எனவே, ஆட்சியில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி அரசு வரும் 22ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கடிதம் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து நான் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்டி கருத்துகளைக் கேட்டேன்.

இன்றைய (பிப். 18) கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வரும் 21ஆம் தேதி காங்கிரஸ், கூட்டணி கட்சியான திமுக, சுயேச்சை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, கலந்தாலோசித்து, எங்களது நிலை குறித்து உரிய முடிவெடுப்போம்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்துவருகிறோம். எதிர்க்கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 11 பேர் மட்டுமே உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 நியமன உறுப்பினர்கள்...! - நாராயணசாமி கருத்து

நியமன உறுப்பினர்கள் 3 பேர், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள உரிமையில்லை என்பதே எங்களுடைய கருத்து. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து வருகிறோம். பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு வேலையை நாங்கள் கண்டிப்பாக முறியடிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்: 'தாமரை'யை அகற்றும் பணியில் ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.