ETV Bharat / bharat

கனமழையால் புதுவையில் பிரதமரின் தேர்தல் பரப்புரை இடம் மாற்றம்! - துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி: கனமழை காரணமாக பிரதமரின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

pm
pm
author img

By

Published : Feb 22, 2021, 9:53 AM IST

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25ஆம் தேதி புதுச்சேரி வருகை தர உள்ளார். இதனையொட்டி கடலூர் சாலை ஏ.எப்.டி மைதான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்.20) கொட்டிய கனமழையால் அப்பகுதி சேறும் சகதியுமானது.

இதன் காரணமாக பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி புதுச்சேரி லாஸ்பேட் ஹெலிபேட் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சிறப்பு உரை நிகழ்த்த இருக்கும் மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அக்கட்சி மாநிலத் தலைவர் சுவாமிநாதன் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி
மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், துணைத் தலைவர் செல்வம், மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி, கூட்டுறவுப் பிரிவு அமைப்பாளர் வெற்றி செல்வம், விவசாய அணி செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: தலை தப்புமா நாராயணசாமியின் அரசு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.