புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், ஜான் குமார். இவரது மகன் விவிலியன் ரிச்சர்டு. நெல்லித்தோப்பு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இருவரும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆவர்.
இந்த நிலையில் நேற்று(நவ.4) இருவரும் அம்மாநில டிஜிபி ரன்வீர் சிங்கை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதையடுத்து திடீரென இருவரும் டிஜிபி காலில் விழுந்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற விழுந்ததாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகைப்படம் ஒருபுறம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. மறுபுறம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிசிடிவி பதிவு: வெடித்துச் சிதறிய வாகனம் - தந்தை, மகன் உயிரிழப்பு!